Gurugram Cafe Case: மவுத் ஃப்ரெஷனரை சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்.. 5 பேருக்கு ரத்த வாந்தி..!

டெல்லியின் குருகிராமில் உள்ள ஹோட்டலில் நடந்த விருந்தில் மவுத் ஃப்ரெஷனரை சாப்பிட்ட 5 பேர் கடுமையான உடல் உபாதைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Gurugram Cafe Case: மவுத் ஃப்ரெஷனரை சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்.. 5 பேருக்கு ரத்த வாந்தி..!
Gurugram Cafe Case (Photo Credit @himalayanhindu X)

மார்ச் 05, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள குருகிராம் (Gurugram) இடத்திலுள்ள லாஃபோரெஸ்டா என்ற ஹோட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஒரு குழு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவர்களுக்கு வாய் புத்துணர்ச்சியை (mouth freshener) வழங்கியுள்ளார். அதை உட்கொண்டவுடன், அவர்கள் வாயில் எரியும் உணர்வு ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளனர். தொடர்ந்து, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குருகிராமில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். Earthquake Hits Iran: பூமிக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஈரான் நாட்டில் பரபரப்பு..!

மேலும் இந்த விவகாரம் குறித்து காவல்நிலையத்திற்கு தெரிந்ததும், ஹோட்டல் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி காவல் துறையினர், ஹோட்டலில் கொடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து, இவர்களுக்கு உணவு பரிமாறிய ஊழியரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Mar 05, 2024 06:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).