Married Woman Gang Raped: காதல் விவகாரத்தில், இளைஞரின் சகோதரி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..!

காதலியுடன் மாயமான இளைஞரை தேடி அவரின் வீட்டிற்கு சென்ற கும்பல், இளைஞரின் சகோதரியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடுமை அரங்கேறி இருக்கிறது.

Married Woman Gang Raped: காதல் விவகாரத்தில், இளைஞரின் சகோதரி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..!
Rape | Representative image (Photo Credit: ANI)

ஆகஸ்ட் 12, லூதியானா (Punjab News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் (Gorakhpur) பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர் சிங். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 18 வயதை கடந்த மகள் இருக்கிறார். ரவீந்தரின் மகளும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லுதியானா (Ludhiana) மாவட்டம், சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரின் காதலுக்கு பெண் தரப்பில் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக, அவர்கள் இருவரும் வீட்டை விட்டு கடந்த ஏப்ரல் மாதம் வெளியேறி இருக்கின்றனர்.

காதல் ஜோடி மாயம்:

இந்த தகவலை அறிந்த ரவீந்தர், தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நபர், தனது சகோதரர் வரிந்தர் சிங், மகன் அமன் சிங், உறவினர் சந்தோஷ் சிங் ஆகியோருடன் இளைஞரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு காதல் ஜோடியை தேடியபோது அவர்கள் இல்லை. வீட்டில் இளைஞரின் திருமணமான சகோதரி தனது 2 குழந்தைகளுடன் இருந்துள்ளார். Electric Pole Fall Down: மின்கம்பம் கீழே விழுந்து வியாபாரி படுகாயம்; நெஞ்சை பதறவைக்கும் காட்சி.. நொடியில் துயரம்.! 

பழிவாங்குவதாக இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்:

தனது மகள் அங்கு கிடைக்காத ஆத்திரத்தில், கயவன் ரவீந்தர் தலைமையிலான கும்பல் திருமணமான பெண்ணை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றது. இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து வைத்து, இதுகுறித்து வெளியே கூறினால் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிடும் எனவும் மிரட்டி இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 01ம் தேதி நடைபெற்றுள்ளது.

காவல்துறையினர் வழக்குப்பதிவு:

பயத்தில் இருந்த பெண்ணும் தனக்கு நடந்த துயரத்தை வெளியில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள திப்பா சாலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர், குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். இவர்கள் தலைமறைவாகியுள்ளதால், குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).