Fruits Vendor Injured (Photo Credit: @pulse_pune X)

ஆகஸ்ட் 11, புனே (Maharashtra News): தென்மேற்குப் பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக மஹாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. ஒருசில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுகின்றன. மின்கம்பங்களும் சேதமடைகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், பிம்பிரி சின்சிவாத் (Pimpri Chinchwad), வாகத், தட்டா மந்திர் பகுதியில் சம்பவத்தன்று வாழைப்பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர், தனது நடைவண்டியில் இருந்தபடி பழங்களை விற்பனை செய்துகொண்டு இருந்தார். அச்சமயம், காரில் வந்த ஒருவர், சாலையில் இருந்தவாறு வாழைப்பழங்களை விற்பனை செய்துகொண்டு இருந்தார். Woman Killed By Cat Bite: பூனை கடித்து 50 வயது பெண்மணி பரிதாப பலி; காரணம் என்ன?.. அலட்சியம் வேண்டாம்..! 

படுகாயத்துடன் அனுமதி: 

இந்நிலையில், மின்கம்பம் திடீரென வியாபாரின் மீது நேரடியாக சாய்ந்து, அவரின் நடைவண்டியின் மீதும் விழுந்தது. இந்த சம்பவத்தில் மின்கம்பத்தின் அருகில் இருந்த பெண்மணி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.விபத்தில் படுகாயமடைந்த வியாபாரி, உடனடியாக அங்கிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.