Baby | Boiling Water (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 01, ஓசூர் (Krishnagiri News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் வசித்து வருபவர் பூபாலன் (வயது 29). இவர் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், குமுதேபள்ளி, பெண்ணாமாடம் பகுதியில் தங்கியிருந்தவாறு கட்டிட பணிகளை கவனித்து வந்துள்ளார். பூபாலனுக்கு அனிதா என்ற மனைவி இருக்கிறார். இருவருக்கும் வேதாஸ்ரீ என்ற மூன்றரை வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த மார்ச் 26, 2025 அன்று, மகளை குளிக்க வைக்க அனிதா அழைத்துச் சென்றார். அடுப்பில் வெந்நீர் இருந்த நிலையில், குளியல் அறையில் அதனை ஊற்றினார். பின் துண்டு எடுத்துவர வீட்டுக்குள் சென்றார். அச்சமயம், வெந்நீருக்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை, வாளியை பிடித்துள்ளது. இதில் வாளி கவிழ்ந்து சிறுமியின் மீது சூடான நீர் பட்டது. இதனால் சிறுமி வலியால் அலறியுள்ளார். Biscuits Dangerous: பசிக்கும்போது பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்? ஷாக் தகவல் சொல்லும் மருத்துவர்கள்.! 

சிறுமி பரிதாப பலி:

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அனிதா, குளியல் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, மகள் சூடான நீர் கொட்டி, தீக்காயத்துடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக சிறுமி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சிறுமி, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்த ஓசூர் அட்கோ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.