Hyderabad Shocker: சாலையில் குழந்தையுடன் நடந்துசென்ற பெண்ணின் செயின் பறிப்பு; பதறவைக்கும் காட்சிகள்.!

8 சவரன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர் நொடியில் பறித்துச்சென்ற பதறவைக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

Hyderabad Shocker: சாலையில் குழந்தையுடன் நடந்துசென்ற பெண்ணின் செயின் பறிப்பு; பதறவைக்கும் காட்சிகள்.!
Hyderabad Chain Snatching 09-02-2024 (Photo Credit: @TeluguScribe X)

பிப்ரவரி 10, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பதஞ்சேறு - அமின்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண், தனது குழந்தையுடன் சாலையில் நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், சற்றும் எதிர்பாராத வேளையில் பெண்ணின் நகையை பறித்துச்சென்றனர். ஈவு இரக்கமின்றி பின்பகுதியில் இருந்து பெண்மணியின் 8 சவரன் (Chain Snatching) தங்க நகையை கும்பல் பிடித்து இழுத்து சென்றது. இதனால் நிலைதடுமாறி பெண்மணி கீழே விழுந்து காயமடைந்தார். Hawaii Earthquake: ஹவாய் தீவுகளில் அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கம்; தலைநகர் வரை உலுக்கியதால் மக்கள் அச்சம்.! 

அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் பதைபதைப்பு வீடியோ: இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை துரத்திச்சென்றும் பலனில்லை. பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் பேரில் செயின் கொள்ளையர்களுக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே லேசான அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Feb 10, 2024 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).