Young Woman Dies By Suicide: 'காதல்' என்ற பெயரில் தொந்தரவு செய்த வாலிபர்கள்; இளம்பெண் எடுத்த விவரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!
தெலங்கானாவில் இரண்டு வாலிபர்கள் காதலிப்பதாக கூறி தொல்லை அளித்து வந்த நிலையில், இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 11, நல்கொண்டா (Telangana News): தெலங்கானா மாநிலம், நல்கொண்டா-மதுகுலப்பள்ளி மண்டலம் சிந்தலகுடேம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 19). இந்த இளம்பெண்ணை, அதே கிராமத்தைச் சேர்ந்த அரூரி சிவா, கொம்மனபொய்னா மது என்ற இரண்டு இளைஞர்கள் காதல் என்ற பெயரில் சில காலமாக துன்புறுத்தி வந்துள்ளனர். Dogs On The Prowl at Chennai International Airport: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்கள்.. வீடியோ வைரல்..!
இந்நிலையில், காதலிக்காவிட்டால் தன்னுடன் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து அந்த இளைஞர்கள் கல்யாணிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், மிகுந்த மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த ஜூலை 06-ஆம் தேதி அன்று பூச்சி மருந்தை (Poison) குடித்துவிட்டு தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார்.
பின்னர், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 09-ஆம் தேதி அன்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து பிரேத பரிசோதனைகள் முடிந்து, இன்று அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில், மதுகுலப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ప్రేమ పేరుతో యువతిని వేధించిన ఇద్దరు యువకులు.. యువతి ఆత్మహత్య
నల్లగొండ - మాడుగులపల్లి మండలం చింతలగూడెంలో కల్యాణి(19) అనే యువతిని అదే గ్రామానికి చెందిన అరూరి శివ, కొమ్మనబోయిన మధు అనే ఇద్దరు యువకులు ప్రేమ పేరుతో కొంతకాలంగా వేధిస్తున్నారు.
ఎవరికి వారే తమను ప్రేమించకుంటే తన… pic.twitter.com/7SpSGZCPKZ
— Telugu Scribe (@TeluguScribe) July 11, 2024
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

