130 Private Video Case (Photo Credit: @rchaudhary_ X_

மே 31, மைன்புரி (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மைன்புரி பகுதியில் வசித்து வருபவர் சுபம் குப்தா. இவரின் தாய் பாஜக மகளிர் அணி நகரத் தலைவர் ஆவார். சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் நடுரோட்டில் பெண் ஒருவருடன் பாலியல் உறவுவில் இருந்தது போன்ற வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை உண்டாக்கியது. இதனிடையே தற்போது சுபம் குப்தாவும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, சுபம் குப்தா கடந்த 2021 ஆம் ஆண்டு பெண்மணி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து மனைவியுடன் மட்டுமல்லாது பல பெண்களுடன் திருமணம் கடந்த உறவில் இருந்தவர், மனைவியை பலமுறை இயற்கைக்கு மாறான வகையில் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. Gold Silver Price: தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை.. வெள்ளி விலை குறைவு.! 

பாஜக பிரமுகர் ஆபாச வீடியோ வைரல்:

இதனிடையே, சுபமின் 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கசிந்து மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த மனைவி, கணவர் எப்போதும் உடல் ரீதியாக அதிக துன்புறுத்தலை ஏற்படுத்தியதாகவும், ஆபாச படங்கள் பார்க்க வற்புறுத்தியதாகவும் கூறி அதிர வைத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விசாரணை விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. அரசியலில் உயர் பொறுப்பில் இருப்போர் இவ்வாறான சர்ச்சையில் சிக்குவது உத்தரபிரதேசம் மாநிலத்தவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சி வீடியோ:

பாஜக பிரமுகரின் மகன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொள்ளும் காட்சியின் பதிவு: