Gold Silver Price: தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை.. வெள்ளி விலை குறைவு.!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லை. இதனால் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price: தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை.. வெள்ளி விலை குறைவு.!
Today Gold Price (Photo Credit: Pixabay)

மே 31, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, உலகளவில் நடந்து வரும் போர்கள், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள், கிடைக்கும் தங்கத்தின் அளவு, உலகளாவிய தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை ரூ.74,000ஐ கடந்து சென்று சரிவை சந்தித்தது. தற்போது மீண்டும் அத்தொகையை நோக்கி மெல்ல உயர்ந்து வருகிறது. தாயுடன் தகாத உறவு.. நண்பரை கொன்று உடலை வயலில் அடக்கம் செய்த வாலிபர்..!

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.71,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.8,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,000 குறைந்து ரூ.1,10,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ரூ.72,000ஐ நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on May 31, 2025 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).