பெண் ஆசிரியையின் அந்தரங்க வீடியோ லீக்; அந்த விசயத்திற்கு சம்மதிக்காததால் 15 வயது சிறார் கும்பல் அதிர்ச்சி செயல்.!

பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் குழு, ஆசிரியை ஒருவரை மிரட்டிய சம்பவம் உ.பி-யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண் ஆசிரியையின் அந்தரங்க வீடியோ லீக்; அந்த விசயத்திற்கு சம்மதிக்காததால் 15 வயது சிறார் கும்பல் அதிர்ச்சி செயல்.!
Gang Rape (Photo Credit: Pixabay)

அக்டோபர் 06, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தில், பெண் ஒருவர் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரா பகுதியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, படிப்பில் கவனம் தேவைப்படுவோருக்கு சிறப்பு வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார். சிறப்பு வகுப்பில் இணைந்த மாணவர் ஒருவர், ஆசிரியையுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அப்போது, அவருடன் தனிமையில் இருப்பது போல புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

ஆசிரியைக்கு மிரட்டல்:

இதனிடையே, மாணவரிடம் இருந்து ஆசிரியை விலகத் தொடங்கியதாக தெரியவருகிறது. இதனால் அதிருப்தியடைந்த மாணவர், ஆசிரியரை தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், செல்போனில் எடுக்கப்பட்ட விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Agarwal Sweets Viral Video: பேக்கரியில் சுற்றித் திரியும் எலிகள்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..! 

நால்வர் கைது:

இந்நிலையில், மாணவர் தனது கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்களுக்கு வாட்சப்பில் ஆசிரியையின் அந்தரங்க வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். அதனை பயன்படுத்தி நால்வரும் வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராமில் புதிய பக்கத்தை தொடங்கி வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோ வைரலாகவே ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர், சிறார்கள் நால்வரையும் கைது செய்தனர். 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 06, 2024 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).