
மார்ச் 23, புலந்த்சாகர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் (Bulandshahr) மாவட்டம், குர்ஜா, மதன்பூர் கிராமத்தில் ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியின் இளைஞர் சங்கத் தலைவராக பொறுப்பில் இருப்பவர் அமித் சௌதாரி. இவர் சம்பவஹன்று தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அக்கம்-பக்கத்து வீட்டாருடன் பேசிக்கொண்டு இருந்தார். கடந்த 20ம் தேதி, மாலை சுமார் 5 மணிக்கு மேல் வீட்டு வாசலில் சௌதாரி இருந்தார். Thug Life: தக் லைஃப் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு.. முதல் பாடல் அப்டேட் இதோ.. மிரட்டும் இசை.!
சுருண்டு விழுந்து உயிரிழந்தார்:
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். இதனை கவனித்த குடும்பத்தினர், உடனடியாக அமித்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் குடும்பத்தினர் கண்ணீர் சோகத்துக்கு உள்ளாகினர். தினமும் காலை நடைப்பயிற்சி சென்று, உடலை நல்ல நிலையில் பராமரித்து வரும் அமித், மாரடைப்பால் உயிரிழந்தது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனது மரணத்துக்கு முன்பு கூட, தாய்மாமாவின் வீட்டு வெளியே நின்று ஒருவருடன் மகிழ்ச்சிப்பட பேசினார். பின் சில நொடியிலேயே அவரின் மகிழ்ச்சி மரணத்தில் முடிந்தது.
மாரடைப்பு காரணமாக அமித் உயிரிழந்த காணொளி:
#बुलंदशहर : राष्ट्रीय लोकदल (रालोद) के नेता अमित चौधरी की अचानक हार्ट अटैक से मौत, सीसीटीवी में पूरी घटना कैद। घर के बाहर खड़े थे, अचानक जमीन पर गिर पड़े और उनकी मौके पर ही मौत हो गई। कुछ मिनट पहले तक बिल्कुल सामान्य दिख रहे थे और दिल की किसी बीमारी से पीड़ित नहीं थे। अचानक हुई… pic.twitter.com/67kJ0jeqUT
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) March 23, 2025