Chain Snatched When Women Preparing Reels Video: ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு; பட்டப்பகலில் பகீர் செயல்.. வீடியோ வைரல்.!
திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பினும், சில நேரம் அவை மக்களின் செயல்களால் சாத்தியமாகிறது. அவ்வாறான திரைப்பட பாணியில் நடந்த ஒரு சமப்வத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.
மார்ச் 24, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் (Ghaziabad Chain Snatching), ஜிலா பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர், ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அவவழியே தலைக்கவசம் அணிந்தபடி வந்தார். Holi Festival 2024: அன்பு, சகோதரத்துவத்தை வர்ணங்களால் வலுப்படுத்தும் ஹோலி பண்டிகை; வரலாறு, சிறப்புக்கள் என்ன?.. விபரம் இதோ.!
ரீல்ஸ் எடுக்க மும்மரத்துடன் பெண் ஈடுபட, அவர் நடந்து வருவது தொடர்பான காட்சி பதிவு செய்யப்பட்டது. அச்சமயம் சற்றும் எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனத்தில் வந்தவர் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்து சென்றார். இவர்கள் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்ததால், அனைத்தும் செல்போனில் பதிவாகி இருக்கின்றன. Young Girl Attacked by Knife: 22 வயது இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.. உதவ வந்த இளைஞரால் தப்பித்த உயிர்.!
விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரின் அதிர்ச்சி செயல் தொடர்பான காட்சிகள் வைரலாகவே, பெண்மணி உடனடியாக இந்திராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் மர்ம நபருக்கு தற்போது வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Live Chain Snatching
Zila--Ghaziabad pic.twitter.com/KMERdLIwCt
— Atulkrishan (@iAtulKrishan1) March 24, 2024
(The above story first appeared on LatestLY on Mar 24, 2024 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

