Young Girl Attacked by Knife: 22 வயது இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.. உதவ வந்த இளைஞரால் தப்பித்த உயிர்.!
முகர்ஜி நகர் பகுதியில் பெண்ணின் மீது நடந்த கத்திக்குத்து தாக்குதலில், அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரால் பெண்ணின் உயிர் சாதுர்யமாக காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
மார்ச் 24, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள முகர்ஜி நகர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்மணி, சம்பவத்தன்று அங்குள்ள பிரதான வீதி வழியே நடந்து சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம், எதிர்திசையில் பெண்மணியை ஆவேசமாக நோக்கியவாறு இளைஞர் ஒருவாறு வருகைதந்தார்.
உதவ முன்வந்த இளைஞர்: சற்றும் எதிர்பாராத விதமாக, பெண்மணியை திடீரென கத்தியால் அவர் சரமாரியாக தாக்கினார். இதனால் நிலைகுலைந்துபோன பெண்மணி அங்கேயே அமர்ந்துவிட, தொடர்ந்து அவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், இதனை கண்டு பெண்ணுக்கு உதவ முன்வந்தார். 3 Children Dies by Short Circuit Fire: செல்போனை சார்ஜில் போட்டபோது நடந்த விபரீதம்; 3 குழந்தைகள் உடல் கருகி பலி., மூவரின் உயிர் ஊசல்.!
கத்தியால் சரமாரி குத்து: மேலும், அங்குள்ளவர்களும் பெண்மணியை நோக்கி வர, இளைஞர் அங்கிருந்து செல்வதுபோல முயன்று பின் மீண்டும் பெண்ணை கத்தியால் குத்த வந்தார். இளைஞர் சுதாரிப்புடன் செயல்பட்டதால் பெண்ணின் உயிர் தப்பியது. ஒருவருக்கு கையில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மரணத்தில் இருந்து தப்பித்த பெண்: நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிருக்கு போராடிய இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அமன் என்ற இளைஞர் பெண்ணை தாக்கியது தெரியவந்தது. தற்போது பெண்மணி உடல்நலம் முன்னேறி வரும் வேளையில், அமனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெஞ்சை பதறவைக்கும் தாக்குதல் காட்சிகள்:
#WATCH | Delhi: A 22-year-old man Aman has been arrested for attacking a girl in the Mukherjee Nagar area with a knife in broad daylight. The incident occurred on 22 March.
The passers-by intervened and tried to stop and catch the accused. The girl did not suffer grievous… pic.twitter.com/y5M4U4girT
— ANI (@ANI) March 24, 2024
(The above story first appeared on LatestLY on Mar 24, 2024 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

