5-Year-Old Boy Gang Raped: 5 வயது சிறுவன் நால்வர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!
கரும்பு வயலுக்கு சிறுவனை அழைத்துச் சென்ற நால்வர் கும்பல், அங்கு அவரை கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வீடியோ எடுத்த கொடுமை உ.பி-யில் நடந்துள்ளது.
அக்டோபர் 01, ஹப்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹப்பூர் மாவட்டம், தானா பாபுகார் பகுதியில் 5 வயதுடைய சிறுவன், தனது தாத்தாவின் பராமரிப்பில் வசித்து வருகிறார். கடந்த செப்.19ம் தேதி சிறுவன் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார்.
வீடியோ எடுத்து பகிர்ந்த இளைஞர்கள்:
அச்சமயம், அங்கு வந்த நால்வர் கும்பல், சிறுவனை (5-Year-Old Boy Rape) தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளது. சிறுவனை கரும்புத்தோட்டத்திற்கு கூட்டிச் சென்ற கும்பல், அங்கு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த விஷயத்தை நிகழ்விடத்தில் ஆடு மேய்த்த 2 இளைஞர்கள், வீடியோ எடுத்து செப்.26ம் தேதி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். Jobs in Malaysia: மலேஷியாவில் கீழ்காணும் பணிகளுக்கு ஆட்கள் தேவை; வெளிநாடு தமிழர் நலத்துறை அறிவிப்பு.. மிஸ்பண்ணாதீங்க.!
சிறுவனின் தாத்தா புகார்:
இதனைத்தொடர்ந்து வீடியோ வைரலாகிய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாத்தா, சிறுவனுக்கு நடந்த விஷயம் குறித்து அறிந்துகொண்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற பாபுகர் காவல்துறையினர், குற்றச்செயலில் ஈடுபட்டதாக அர்ஷ், ஜுனைத் ஆகியோரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், பிற இருவரின் அடையாளம் சேகரிக்கப்படுகிறது. இவர்கள் நால்வரும் தற்போது தலைமறைவாக இருப்பதால், காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய வலைவீசி இருக்கின்றனர்.
(The above story first appeared on LatestLY on Oct 01, 2024 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

