அக்டோபர் 01, கிண்டி (Chennai News): தமிழ்நாட்டில் இருந்து மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சவூதி அரேபியா உட்பட பல வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்வோர், சில நேரங்களில் பணத்தை இழந்து தவிப்பது உண்டு. மேலும், வெளிநாட்டில் வேலை வாங்கித்தருகிறேன் என பல இலட்சக்கணக்கான தொகையை வாங்கி, அவர்களை ஏமாற்றி தப்பியோடும் கும்பலும் அதிகம் உலாவி வந்தன. இவர்களால் ஏற்பட்ட இன்னலை தவிர்க்க, தமிழ்நாடு அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கி, வெளிநாட்டில் வேலைக்கு செல்வோரை பாதுகாக்க முயற்சி எடுத்து வருகிறது.
மலேஷியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு:
அதன்படி, அயலக தமிழர் நலத்துறை சார்பில், வெளிநாடுகளில் வேலைக்கு சென்றோர் பதிவு செய்து வைக்கவும், அவர்களுக்கு வேலை வழங்குவதாக கூறும் நிறுவனத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய பதில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் மோசடி செயல்கள் குறைக்கப்படும் என நம்பப்படுகிறது. இந்நிலையில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில், மலேஷியாவில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Girl Dies by Electrocution: மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி மரணம்; வீட்டு வாசலில் நடந்த துயரம்.. பெற்றோர்களே கவனம்.!
வேலையும், ஊதியமும்:
அதன்படி, மலேசியாவில் பணிபுரிய வெல்டர் (Welder), பைப் பிட்டர் (Pipe fitter), ரிக்கர் (Rigger), கிரிண்டர் (Grinder), பைப்பிங் போர்மேன் (Piping Foremen), பைப்பிங் சூப்பர்வைசர் (Piping Supervisor), டேங்க் பிட்டர் (Tank Fitter), டேங்க் போர்மேன் (Tank Foreman), அசிஸ்டன்ட் பிட்டர் (Assistant Fitter), எலக்டீரிசியன் (Electrician), பிளானிங் எஞ்சினியர் (Planning Engineer) மற்றும் தர ஆய்வாளர் (Qc inspector) தேவைபடுகிறார்கள். இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 5 ஆண்டுகள் பணி அனுபவத்துடன், 44 வயதுக்குட்பட்டு இருத்தல் வேண்டும்.
உணவு, விசா டிக்கெட் பற்றி கவலை வேண்டாம்:
வெல்டர் 6G Tig & Arc பணிக்கு ரூ.45:760/-, வெல்டர் Tig ARC Stailess Steel Alloy பணிக்கு ரூ.54,080/-, பைப் பிட்டர் பணிக்கு ரூ.41,600/-, ரிக்கர் பணிக்கு ரூ.33,260/-, செமி ஸ்கில்ட் கிரைண்டர் பணிக்கு ரூ.29120/-, பைப்பிங் போர்மேன் பணிக்கு ரூ.58,240/- பைப்பிங் சூப்பர்வைசர் பணிக்கு ரூ.60,000/-, டேங்க் பிட்டர் பணிக்கு ரூ.41,600/-, டேங்க் போர்மேன் பணிக்கு ரூ.58,240/-, அசிஸ்டன்ட் பணிக்கு பணிக்கு ரூ.33,280/-, எலக்ட்ரீசியன் பணிக்கு ரூ.37,440/-, 3G 4G வெல்டர் பணிக்கு ரூ.37,440/-, பிளானிங் எஞ்சினியர் பணிக்கு ரூ.70,000/-, கியூசி இன்ஸ்பெக்டர் (தர நிர்ணய ஆய்வாளர்) பணிக்கு ரூ.80,000/- ஊதியமாக வழங்கப்படும். உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமாணப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். இப்பணிகளுக்கான நேர்காணல் ௦4.10.2024 மற்றும் 05.10.2024 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோடேட்டா (Resume), பாஸ்போர்ட், ஆதார் ஆகிய சான்றிதழின் ஒரிஜினல் & நகலுடன் கீழ்காணும் முகவரியை நேரில் அணுக வேண்டும்.
முகவரி:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்,
(தமிழ்நாடு அரசு நிறுவனம்),
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,
42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி சென்னை -32.
கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505660/22502207) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9506239065) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.