Affair Wife Caught by Husband: 2 இளைஞர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி; விடுதிக்குள் சென்று விருந்து வைத்த கணவன்.. பரபரப்பு சம்பவம்.!

ஆத்திரத்தில் மதியிழந்து செயல்பட்டால் வழக்கு நம் மீது திரும்பும் என்பதை மறக்க வேண்டாம்.

Wife Caught by Husband (Photo Credit: @NCMIndiaa X)

மே 10, கசன்கன்ச் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கசன்கன்ச் மாவட்டத்தில் வசித்து வரும் மருத்துவர் ஒருவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பு மனக்கசப்பு ஏற்பட்டு அவ்வப்போது குடும்பத்தகராறு நிலவி இருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவரை பிரிந்து விவாகரத்து செய்யாமல் தனியே வசித்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக தனியாக வசித்து வரும் பெண்மணிக்கு பலருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. சம்பவத்தன்று பெண்மணி தனது ஆண் நண்பர்கள் இருவருடன் தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி இருக்கிறார்.

வெளுத்து வாங்கிய கணவனும், பாய்ந்த வழக்கும்: இந்த தகவல் கிடைக்கப்பெற்ற கணவர், உடனடியாக மனைவி இருக்கும் அறைக்கு சென்று விடுதி ஊழியர்களின் எதிர்ப்பை மீறி கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அங்கு மனைவி இருவருடன் அரைகுறை ஆடையுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ந்துபோனவர், மனைவி மற்றும் அவரின் ஆண் நண்பர்களை கடுமையாக அடித்து நொறுக்கினார். இதனிடையே தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மருத்துவர், அவரின் உறவினர்கள், பெண்ணின் ஆண் நண்பர்களான மூன்று காவல் நிலையம் அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் புலந்த்சஹார் பகுதியை சேர்ந்த ஒருவர், காசியாபாத் பகுதியை சேர்ந்த மற்றொருவர் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது அம்பலமானது. விசாரணைக்கு பின் மருத்துவர், அவரின் உறவினர்கள், பெண்ணுடன் கள்ளக்காதல் வயப்பட்ட 2 பேர் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.