Varanasi Youth Attacks Woman (Photo Credit : @sirajnoorani X)

நவம்பர் 10, வாரணாசி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி, லால்பூர் பாண்டேபூர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் தனது தாயுடன் தனியாக இருந்துள்ளார். பெண்மணியின் தந்தை வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததை உறுதி செய்த இளைஞர் வீடு புகுந்து அவரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்ணை இளைஞர் சமீப காலமாக காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவ்வப்போது வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, வீட்டில் தாயுடன் தனியாக இருந்த சமயத்தில் வீடு புகுந்து அவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ந்த பெண்மணி உடனடியாக வீட்டை விட்டு வெளியேற முயன்றும் பலனில்லை. JustIN: 3 வயது சிறுவனின் உயிரைப்பறித்த பலூன்.. விழுங்கி பறிபோன உயிர்.. பெற்றோர்களே கவனம்.!

திருமணம் செய்துகொள்ள மிரட்டல் விடுத்த இளைஞர்:

இதனை தொடர்ந்து இளைஞர், "என்னை திருமணம் செய்துகொள், இல்லை என்றால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என மிரட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இளம்பெண்ணின் தாயையும் மிரட்டி தாக்க முற்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி ரோட்டில் வந்து கதறிய நிலையில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இளைஞரை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் இளைஞரோ என் அருகில் யார் வந்தாலும் அவர்களையும் தாக்குவேன் என தெரிவித்ததால் காப்பாற்ற வந்தவர்கள் பின் வாங்கினர். பெண்மணியை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில்,  சிறுவன் ஒருவன் அவர் அருகில் செல்ல முற்பட்ட போது அவரையும் தாக்க இளைஞர் முயன்றதால் அவரும் பின் வாங்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய இளைஞர்: