Admit Card with Sunny Leone Photo: சன்னி லியோன் புகைப்படத்துடன் காவலர் தேர்வுக்கான நுழைவுசீட்டு; இளைஞருக்கு அதிர்ச்சிகொடுத்த அலட்சியப்பணி.!

ஒரு காவலர் பணிக்காக 80 போட்டித்தேர்வுகள் முயற்சித்து வந்த உ.பி மாநில காவலர் தேர்வில், ஒரு இளைஞரின் தேர்வு அவரின் நுழைவுசீட்டில் சன்னி லியோனின் போட்டோ காரணமாக தவிர்க்கப்பட்டது.

Victim Dharmendra Singh | Sunny Leone Admit Card Issue (Photo Credit: @ranvijaylive / @manojkrs29 X)

பிப்ரவரி 19, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநில காவல்துறையில் பணியாற்றுவதற்கான போட்டித்தேர்வுகள் பிப்ரவரி 17, 18ம் தேதியில் நடைபெற்றது. இந்த போட்டித்தேர்வுகளில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவர்கள் பலரும் தங்களின் தேர்வு மையங்களுக்கு சென்று குவிந்ததால் பயணிகள் நெரிசல் கடுமையாக காணப்பட்டது. 60,244 பணிகளுக்கு பல இலட்சம் இளைஞர்கள் போட்டிபோட்டு இருக்கின்றனர். அதாவது ஒரு பணிக்காக 80 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். அதன்படி 60 ஆயிரத்திற்கும் அதிகமான பணிகளுக்கு இலட்சக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். Pooja Hedge with Saree: மஞ்சள் நிற சேலையில் மாஸ் காண்பித்த பூஜா ஹெட்ஜ்; அசத்தல் கிளிக்ஸ் உள்ளே.! 

சன்னி லியோன் புகைப்படத்துடன் நுழைவுசீட்டு: இந்நிலையில், அம்மையத்தை சேர்ந்த தர்மேந்திரா சிங் என்ற இளைஞரும் காவலர் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு தேர்வு மையத்தின் சார்பில் நுழைவுசீட்டும் விநியோகம் செய்யப்பட்டது. இதனை பதிவிறக்கம் செய்த தர்மேந்திராவுக்கு பேரதிர்ச்சியாக, அவரின் நுழைவுசீட்டில் சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதனால் அவரால் தேர்வை எழுத இயலாத சூழ்நிலை உருவானது. அவர் தனது மனவேதனையை வருத்தத்துடன் பதிவு செய்தார். அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தேர்வர் ஒருவர் தேர்வை எழுத இயலாத சூழல் உருவாகி இருப்பதாக உள்ளூர் சமூக நலஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement