Jammu and Kashmir Blast (Photo Credit : @SachinGuptaUP X)

நவம்பர் 15, ஜம்மு காஷ்மீர் (Jammu - Kashmir News): இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நவம்பர் 10 ஆம் தேதியன்று மாலை கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து (Red Fort Car Explosion) சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. Bihar Election: தனிப்பெரும் கட்சியாக மலர்ந்த தாமரை.. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை.. மிகப்பெரிய வெற்றி.!

360 கிலோ வெடிபொருட்கள்:

முதற்கட்ட விசாரணையின் போது கார் வெடிப்பு சம்பவமானது தற்கொலை படை தாக்குதல் என உறுதி செய்யப்பட்டதால் ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்த மூன்று மருத்துவர்கள் உட்பட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை முகாமாக பயன்படுத்தி சதி செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கைதான மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பரிதாபாத்தில் காஷ்மீர் போலீசார் சோதனை நடத்தியதில் 360 கிலோ வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் வெடி விபத்து:

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்த தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டு தடயவியல் குழு, காவல்துறையினர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிர் பிழைப்பது கடினம் எனவும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் சேதமடைந்தன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் வெடி விபத்து தொடர்பான வீடியோ (Jammu and Kashmir Blast Video):