Sivaganga Police Vehicle Hits Bike (Photo Credit : Youtube)

நவம்பர் 12, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள சிட்டம்பட்டியில் வசித்து வருபவர் பிரசாத் (வயது 26). இவரது மனைவி சத்யா. தம்பதிக்கு திருமணமாகி 3 வயதுடைய அஸ்வின் என்ற குழந்தையும் உள்ளார். பிரசாத் நேற்று தனது குடும்பத்துடன் அனஞ்சியூர் பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், அங்கிருந்து வரும் போது தனது அண்ணியான சோனை ஈஸ்வரியையும் சேர்த்து நான்கு பேராக இரு சக்கர வாகனத்தில் திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சிட்டம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தபோது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அவ்வழியே வந்த ராமநாதபுரம் போலீஸ் வாகனம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. 2026 Holiday List: 2026ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்.. எந்தெந்த நாட்களில் விடுமுறை தெரியுமா?.. முழு விபரம்.!

போலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலி.!

இந்த சம்பவத்தில் பிரசாத் மற்றும் அவரது மனைவி, குழந்தை உள்ளிட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை தொடர்ந்து காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸ் வாகனம் மதுரை வந்து திரும்பிய போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மக்கள் சாலை மறியல்:

இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் வாகன ஓட்டுனரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் துறையினர் உடனடியாக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் மீது வழக்கு பதிவு செய்வதாக உறுதி அளித்ததால் போராட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.