நவம்பர் 16, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு, அரையாண்டு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணைகள் (Half Year Examinations Time Table 2025 Tamilnadu) வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின்படி, அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 10, 2025 முதல் தொடங்கி டிசம்பர் 23, 2025 வரை நடைபெறுகிறது. தேர்வுக்குபின் புத்தாண்டு விடுமுறையுடன் 11 நாட்கள் விடுமுறைக்குப்பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முக்கியமானது என்பதால், மாணவர்கள் அதற்கேற்ப தயாராகும் வகையில் முன்கூட்டியே தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. நாளைய வானிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை (6th Standard Half Year Exam Time Table):
15.12.2025 - தமிழ்
16.12.2025 - ஆங்கிலம்
17.12.2025 - விருப்ப மொழி
18.12.2025 - கணிதம்
19.12.2025 - உடற்கல்வி
22.12.2025 - அறிவியல்
23.12.2025 - சமூக அறிவியல்
10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை (10th Standard Half Year Exam Time Table):
10.12.2025 - தமிழ்
12.12.2025 - ஆங்கிலம்
15.12.2025 - கணிதம்
18.12.2025 - அறிவியல்
22.12.2025 - சமூக அறிவியல்
23.12.2025 - விருப்ப மொழி
10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை (12th Standard Half Year Exam Time Table):
10.12.2025 - தமிழ்
12.12.2025 - ஆங்கிலம்
15.12.2025 - கணிதம், விலங்கியல்
17.12.2025 - வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல்
19.12.2025 - பொருளாதாரம், இயற்பியல்
22.12.2025 - உயிரியல், தாவரவியல்
23.12.2025 - கணினி அறிவியல்