Minor Girl Killed by Tuition Master: 15 வயது சிறுமி காதல் பெயரால் சீரழிப்பு.. 43 வயது டியூசன் மாஸ்டரால் கர்ப்பிணி சிறுமி கொடூர கொலை.!

தன்னிடம் பயிற்சி எடுக்க வந்த சிறுமியை ஏமாற்றி வலையில் வீழ்த்தி சீரழித்த பயிற்சி ஆசிரியர், இறுதியில் சிறுமி கர்ப்பத்தை கலைக்க மறுத்த காரணத்தால் கொலை செய்த கொடூரம் வாரணாசியில் அரங்கேறி இருக்கிறது.

Varanasi Minor Girl Murder Case 16-March-2024 (Photo Credit: SyedSho43211335 X)

மார்ச் 16, வாரணாசி (Uttar Pradesh News): திட்டத்துடன் காரியத்தை அரங்கேற்றி குற்றச்செயலில் இருந்து தப்பமுயன்ற பயிற்சி ஆசிரியரின் பதறவைக்கும் செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட சடலம்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பனாரஸ் இரயில் நிலையத்திற்கு வருகை தந்த காசி எக்ஸ்பிரஸ் இரயிலில், சாக்குமூட்டை ஒன்று மர்மமான வகையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இரயில் பெட்டியில் இருந்த சாக்கு மூட்டையை அதிகாரிகள் பிரித்து (Varanasi Minor Girl Killed) பார்த்தபோது, அதில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் சடலம் இருந்துள்ளது. சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இதனால் சிறுமி மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை உணர்ந்துகொண்ட காவல் துறையினர், அம்மாநிலத்தில் மாயமான சிறுமிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறுமியின் சடலம் கண்டெடுப்பு: இதனிடையே, அங்குள்ள வாரணாசி, காப்ஷேதி காவல் நிலையத்தில் தனது 15 வயது மகளை காணவில்லை என தந்தை ஒருவர் புகார் அளித்திருந்தார். அவரை நேரில் அழைத்து சிறுமியின் சடலத்தை காண்பிக்கையில், அது தனது மகள் என்பதை உறுதி செய்தார். கடந்த பிப்ரவரி 21ம் தேதி உடல் கன்னெடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் சிறுமி கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. இதனால் சிறுமியுடன் பழகிய நபர்களே இவ்வாறான கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என அதிகாரிகள் உறுதி செய்தனர்.

குற்றவாளியை தூக்கிய காவல்துறை: தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் கஹர்பூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் குமார் படேல் என்பவரை சந்தேகத்தின் கீழ் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அதிர்ச்சிதரும் உண்மை சம்பவம் அம்பலமானது. அதிகாரிகளிடம் சஞ்சய் குமார் படேல் (வயது 43) தெரிவித்த வாக்குமூலமாவது பின்வருமாறு, Man Masturbation & Sleeping in Theatre: தியேட்டரில் சுயஇன்பம்; படம் முடிந்ததும் பார்வையாளர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி..! 

Murder | Women Sad  | Both File Pics (Photo Credit: @ItsKhan_Saba X / Pixabay)

காதல் பெயரில் அத்துமீறலும், கர்ப்பமும்: டியூசன் மாஸ்டராக வேலை பார்த்து வந்த சஞ்சய் குமார் படேலிடம், கடந்த 2022ம் ஆண்டு சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்க வந்துள்ளார். பின் 2023ல் சிறுமி பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், ஜூன் 2023ல் அவரிடம் உன்னை காதலிக்கிறேன் என ஆசையாக பேசி நடித்து இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, சிறுமியிடம் தனிமையில் நெருங்கி இருக்கிறார். இதனால் கடந்த நவம்பர் 2023 அவர் கர்ப்பமாக, தகவலை சஞ்சய் குமாரிடம் தெரிவித்து இருக்கிறார்.

பிளாஸ்டிக் கவரை முகத்தில் சுற்றி கொடூர கொலை: அவரோ சிறுமியை கருக்கலைப்புக்கு அறிவுறுத்த, சிறுமி தன் மானம் மட்டுமல்லாது, குடும்பத்தின் மானமும் பறிபோகும் என அஞ்சி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். முதலில் சொல்லிப்பார்த்த சஞ்சய், பின்னாளில் உண்மை தெரிந்துவிடும் என விபரீத எண்ணத்திற்கு முன்வந்துள்ளார். தனது திட்டப்படி சிறுமியை கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று வீட்டிற்கு அழைத்தவர், அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட குளிர்பானத்தில் கலந்து வழங்கியுள்ளார். இதனைக்குடித்த சிறுமி மயங்கிவிட, அவரின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் இறுக்கி மூச்சிரைத்து கொலையை அரங்கேற்றி இருக்கிறார். பின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இரயில் விட்டுச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர் சஞ்சய் குமார் படேலை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement