ஆகஸ்ட் 22, புதுடெல்லி (NewDelhi): இந்திய பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவி வகித்து வரும் நரேந்திர மோடி (Narendra Modi), தற்போது வரை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி தொடர்பான பாதைக்கு வித்திட அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு மொத்தமாக 100-க்கும் மேற்பட்ட முறைகள் பயணம் செய்துவிட்டார்.
இந்த பயணங்களின் வாயிலாக இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு, இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு வளர்ச்சி, தொழில் முதலீடுகள், பாதுகாப்பு தளவாட பரிமாற்றங்கள், எதிர்கால கனிம வளங்கள் பகிர்வு உட்பட பல்வேறு விஷயங்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக அமைத்துள்ளது.
கடந்த காலங்களில் இந்தியாவின் சார்பில் உலக நாடுகளுக்கு பயணிக்கும் இந்திய பிரதிநிதிகளை மாறுபட்ட அடையாளத்துடன் பார்த்து வந்த உலகம், நமது வளர்ச்சி காரணமாக ஒவ்வொருமுறையும் அழைத்து நமக்கான அங்கீகாரத்தை தருகிறது. உலகின் முக்கிய வணிக நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தையும் பெற்றுள்ளது. Vadalur Bus Accident: தனியார் பேருந்து – கார் மோதி பயங்கர விபத்து; 3 பேர் பலி., 30 பேர் படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் கோர சம்பவம்.!
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக தென்னாபிரிக்கா செல்கிறார். தென்னாப்பிரிக்காவின் கெளதேங் (Gauteng Province) மாகாணத்தின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் மாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.
ஜோக்கன்ஸ்பர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள தென்னாபிரிக்க அதிபர் சைரில் ராமபோசா (Cyril Ramaphosa) அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, அதனை ஏற்று பிரதமர் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்.
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளதை கொரோனாவும்-உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போரும் உணர்த்தியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi departs for Johannesburg, South Africa.
He is visiting South Africa from 22-24 August at the invitation of President Cyril Ramaphosa to attend the 15th BRICS Summit being held in Johannesburg under the South African Chairmanship. pic.twitter.com/hRy220autL
— ANI (@ANI) August 22, 2023