ஆகஸ்ட் 21, குறிஞ்சிப்பாடி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர், குறிஞ்சிப்பாடி (Vadalur Bus Accident) பகுதியில் இன்று மாலை கடலூரில் இருந்து விருத்தாச்சலம் (Cuddalore to Virudhachalam) நோக்கி தனியார் பேருந்து பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர்.
சௌமியா பெயர் கொண்ட தனியார் பேருந்து குறிஞ்சிப்பாடி (Kurinjipadi) பகுதியில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கார் ஒன்று முன்னால் சென்றுகொண்டு இருந்த இருசக்கர வாகனத்தை முந்திச்செல்ல நினைத்து தனக்கு வலப்பக்க சாலையில் அதிகளவு தூரம் வந்து கடக்க முயற்சித்துள்ளது. Canada Wildfire Video: கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீயால் பரிதவிக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம். 30,000 மக்களை வெளியேற்றுகிறது கண்ட அரசு.!
அப்போது, காருக்கு எதிர்திசையில் விருத்தாச்சலம் நோக்கி பயணம் செய்த பேருந்தும் (Vadalur Private bus Car Bike Collison) வந்துவிட, கார் ஓட்டுனரின் கணக்கீடு தவறானதால் நேரடியாக பேருந்தின் மீது கார் மோதியது. பக்கவாட்டு பகுதியில் கார் மோதினாலும், இரண்டு வாகனங்களின் வேகம் பதைபதைப்பு விபத்தை ஏற்படுத்தியது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்திசையில் சில அடி பயணித்துள்ளது. அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர், பயத்தில் வாகனத்தை கீழே போட்டு தனக்கு இடப்பக்கம் சாலையோரமாக விழுந்தார்.
ஆனால், பேருந்து எதிர்திசையில் பாய்ந்து, சாலையோரம் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் மீது மோதி, அங்கிருந்து சில அடி தூரம் சென்று நின்றது. கிட்டத்தட்ட சில நொடிகளில் நெஞ்சை பதறவைக்கும் விபத்து நடந்து முடிந்தது. Asia Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023-ல் களமிறங்கும் இந்திய சிங்கங்களின் லிஸ்டை வெளியிட்டது பிசிசிஐ.! விபரம் உள்ளே.!
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 பேர், காரில் பயணம் செய்த ஒருவர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 30 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்தது தொடர்பான பதைபதைப்பு வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம் வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதியில் நடந்த வாகன விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியீடு..
கார் ஓட்டுனரின் செயலால் பறிபோன உயிர்கள்.. 3 பேர் பலி., 30 பேர் படுகாயம்.. #Cuddalore | #Kurinjipadi | #Vadalur | #Accident pic.twitter.com/iKShk05NVA
— Sriramrpckanna (@Sriramrpckanna1) August 21, 2023
மிதவேகம் மிகநன்று; சாலை பயணங்களில் கவனம் தேவை..