Railway Recruitment: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400 சம்பளத்தில் இந்திய இரயில்வேயில் வேலை.. 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
Indian Railways Recruitment: இந்திய இரயில்வேயில் 5,810 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் உள்ளிட்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி தொடர்பான விபரங்கள், பணியிடங்கள், கல்வித் தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
அக்டோபர் 27, புதுடெல்லி (New Delhi News): இந்திய இரயில்வே துறையில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் அல்லாத பணிகளான ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் உட்பட பிரிவுகளின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதியாக நவம்பர் 20 ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தித்தொகுப்பில் பணி தொடர்பான விபரங்கள், பணியிடங்கள், கல்வித் தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக காணலாம். Govt Job: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தேர்வின்றி சொந்த மாவட்டத்தில் அரசு வேலை.. கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பணி தொடர்பான விபரங்கள்:
- பணி - ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் டைப்பிஸ்ட், ட்ராபிக் அசிஸ்டன்ட்
- காலி பணியிடங்கள் - 5,810
- கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அக்கவுண்ட் அசிஸ்டன்ட் மற்றும் டைப்பிஸ்ட் பணிக்கு ஆங்கிலம் / ஹிந்தி ஆகிய மொழியில் கணினி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்
- வயதுவரம்பு - 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் (சில பிரிவினருக்கு வயது தளர்வுகள் உண்டு)
- சம்பளம் - 25,500 முதல் 35,400 வரை
- விண்ணப்பிக்க கடைசி தேதி - 20/11/2025
தேர்வு செய்யப்படும் முறை:
- இரண்டு கட்டங்களாக கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுகள் மற்றும் திறன் தேர்வு நடைபெறும்.
- இறுதியாக ஆவண சரிபார்ப்புக்கு பின் பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ என்பதன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும்.
- எஸ்சி / எஸ்டி பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை பார்க்க: https://www.rrbchennai.gov.in/downloads/Final-CEN-06-2025-21-10-2025-Publish.pdf
- கூடுதல் விபரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/
(The above story first appeared on LatestLY on Oct 27, 2025 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

