அக்டோபர் 13, சென்னை (Chennai News): தமிழ்நாடு முழுவதும் சுமார் 12,525 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் (Panchayat Secretary Job) நிர்வாகப் பணிகளை கவனித்து வருகின்றனர். தலைவர் உறுப்பினர்களுக்கு உறுதுணையாக ஊராட்சியின் செயல்பாடுகளை கவனிப்பதோடு மட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவது, குடிநீர், தெரு விளக்கு அமைப்பது, சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது உட்பட அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, சுகாதாரம் தொடர்பான அரசு திட்டங்களை மேற்பார்வையிட்டு வரி வசூலை உறுதி செய்வது இவர்களின் பணியாகும்.
கிராம ஊராட்சி செயலர் வேலை குறித்த விபரம்:
இவர்கள் அரசு பணியாளர்களாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் 1450 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நபர்கள் அதே மாவட்டத்தில் வசிப்பவராக இருப்பின் டிஎன்ஆர்டி என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை, தகுதி, வயது வரம்புக்கேற்ப பணியிடங்கள் நிரப்பப்படும். ஊதியமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8 ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருப்பது அவசியம். Indian Bank Job: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. வாய்ப்பை தவறவிடாதீங்க.. இதுதான் கடைசி தேதி.!
விண்ணப்பிக்க கடைசி தேதி:
அக்டோபர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். இதன்பின் டிசம்பர் 3ஆம் தேதி தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு 16 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். எழுத்துத்தேர்வு இல்லாமல் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதனை தொடர்ந்து 17 ஆம் தேதி பணி நியமன ஆணையும் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த நேர்காணலை மேற்கொண்டு பணியாளர்களை தேர்வு செய்யும்.
பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இணையப்பக்கத்தில் உள்ள "மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்" என்பதை கிளிக் செய்தால் நீங்கள் நிரப்ப வேண்டிய பக்கத்திற்கு செல்லும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி சமர்ப்பித்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். அதுபோல ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதோர் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.