அக்டோபர் 02, புதுடெல்லி (New Delhi): ஹரியானா மாநிலத்தில் உள்ள இமாலய மலைத்தொடரில், யமுனா நதிக்கரையில் வளர்ந்து கிடக்கும் மரங்களைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறைப்படி இந்திரி (Indri) நகரில் தயாரிக்கப்படும் விஸ்கி ரக மதுபானம், மிகப்பிரபலமான மது வகைகளில் ஒன்றாகும்.
இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கிய இந்த்ரி ரக மதுபானம், தற்போது சர்வதேச அளவிலான அடையாளத்தினை வென்றுள்ளது. உலக அளவில் மிகச்சிறந்த விஸ்கியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் மிகசிறந்த விஸ்கி போட்டியில் கலந்துகொண்ட இந்த்ரி விஸ்கி அப்பெருமையை தட்டிச்சென்றுள்ளது. 2023 விஸ்கி அவார்ட்ஸ் (2023 Whiskey Awards) நிகழ்ச்சியில் இந்த்ரி மதுபானம் சிறந்த மதுபானமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. Speed Skating 3000m: மேலும் ஒரு பதக்கம்... அதிவேக ஸ்கெட்டிங் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா...!
நடப்பு ஆண்டில் தீபாவளிக்கு என புதிய ரகத்தை இந்த்ரி மதுபானம் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. அது தற்போது உலகளாவிய அடையாளத்தையும் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் ஸ்காட்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டிஷ் நாடுகளைச் சார்ந்த பிரபல விஸ்கி நிறுவனங்களும் தங்களின் தயாரிப்பு விஸ்கியை அறிமுகம் செய்திருந்தது.
அனைத்தையும் பரிசோதனை செய்த நடுவர்கள் இறுதியாக இந்தியாவின் இந்த்ரி விஸ்கியை மிகச் சிறந்த விஸ்கியாக தேர்வு செய்தனர். 100 ஆண்டுகள் வரையில் மரத்தினால் ஆன பெரிய உருளைகளில் அடைத்து வைக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி இந்த்ரி விஸ்கி தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் மாநிலத்தின் வரி உட்பட பிற நிர்ணயத்திற்கு ஏற்றாற்போல, இதன் விலை ரூ.3500 முதல் ரூ.5000 வரை இருக்கும் என்பது குறிப்பிட்டக்கது.
Indian whiskey, the 'Indri' is awarded as the best whisky in the world at the 2023 Whiskies of the World Awards. pic.twitter.com/2TzTJTF5nZ
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 1, 2023