அக்டோபர் 02, ஹாங்சூ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சூ நகரில், 19வது ஆசிய கோப்பை விளையாட்டுத்தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் மாதம் 28ம் தேதி தொடங்கிய விளையாட்டுப்போட்டிகள், அக்டோபர் மாதம் 08ம் தேதி வரை நடைபெறுகிறது.
39 பிரிவுகளில் பல்வேறு ஆசிய நாடுகள் தொடர்ந்து பாதகங்களுக்காக போட்டியிடுகின்றன. தற்போது வரை இந்தியா 11க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை குவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 40க்கும் அதிகமான பதக்கங்கள் பெறப்பட்டுள்ளன. Church Collapse: தேவாலயம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பேர் உடல் நசுங்கி பலி., 20 பேர் உயிர் ஊசல்..!
இந்நிலையில், இன்று இந்திய ஆடவர் குழு ஸ்கெட்டிங் அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. 3000 மீட்டர் அளவிலான தொடர் ஸ்கெட்டிங் போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
இந்தியா சார்பில் விளையாடிய ஆர்யன் பால், ஆனந்த் குமார், சித்தார்த், விக்ரம் அணியினர் 3000 மீட்டரை 4:10.128 நேரத்தில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
🥉 BACK TO BACK BRONZE GLORY
What a start to the day! ☀️
's Aryan Pal, Anand Kumar, Siddhant, and Vikram have rolled their way to BRONZE in the Men's Speed Skating 3000m Relay, clocking an incredible time of 4:10.128! 🤩
🛼 Let's give them a roaring applause for their… pic.twitter.com/WkLDxvKvTS
— SAI Media (@Media_SAI) October 2, 2023