Bomb Threat to Indigo Flight: நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக தரையிறக்கம்..!

ஹைதராபாத் நோக்கி பயணித்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட காரணத்தால், அவசரமாக அது நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.

Bomb Threat to Indigo Flight: நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக தரையிறக்கம்..!
Indigo Flight (Photo Credit: Wikipedia)

செப்டம்பர் 01, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Hyderabad) நோக்கி, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6இ 7308 விமானம் பயணம் செய்துகொண்டு இருந்தது. Car Accident: 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து; வாலிபர் பலி.. இருவர் மீது வழக்குப்பதிவு..! 

வெடிகுண்டு மிரட்டல்:

இந்த விமானம் பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் அவசர கதியில் தரையிறக்க நாக்பூர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு படை அதிகாரிகள் சார்பில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த விஷயம் குறித்து விசாரணையும் தொடங்கி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Sep 01, 2024 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).