Jammu Kashmir: பீகார் தொழிலாளர்கள் மீது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்.!

சோபியான் மாவட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் பீகார் தொழிலாளர்கள் தங்கிருந்த பகுதியில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

Jammu Kashmir: பீகார் தொழிலாளர்கள் மீது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்.!
JK Terrorist Attack Visuals From Spot (Photo Credit: ANI)

ஜூலை 14, ஸ்ரீநகர் (Jammu Kashmir): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் சதிச்செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு அரசு பணிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அங்குள்ள சோபியான் மாவட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் பீகார் தொழிலாளர்கள் தங்கிருந்த பகுதியில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். PM Modi Honour France: உலக அரங்கில் முதல் முறை; இந்திய பிரதமருக்கு உயரிய விருது கொடுத்து கௌரவித்த பிரான்ஸ் அதிபர்.!

இந்த தாக்குதலில் அமோல் குமார், பிந்து குமார் தாகூர், ஹெர்லால் யாதவ் ஆகியோர் காயமடைந்து இருக்கின்றனர். இவர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள சுபால் (Supaul) மாவட்டத்தை சேர்த்தவர்கள் ஆவார்கள்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jul 14, 2023 09:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).