Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதல்; நொடியில் உயிர் தப்பிய சென்னை பெண்.. அதிர்ச்சி தகவல்..!
பஹல்காம் தாக்குதலில் இருந்து தப்பிய, சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, இச்சம்பவம் குறித்த துயரமான சம்பவங்களை கூறுகிறார்.
ஏப்ரல் 23, பஹல்கம் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் (Pahalgam Terrorist Attack) நேற்று (ஏப்ரல் 22) நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவாக அறியப்படும் தி ரெசிஸ்டன்ஸ் பிராண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மரண பயத்தில் அலறிய குழந்தைகள்.. "நாங்கள் இந்திய இராணுவம்.. உங்களை பாதுகாக்க வந்துள்ளோம்" ஆஸ்வாசப்படுத்திய அதிகாரிகள்..!
உயிர் தப்பிய பெண் அளித்த பேட்டி:
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய, சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் சென்னையில் இருந்து ஏப்ரல் 19ஆம் தேதி, ஸ்ரீநகருக்கு வந்தோம். சோன்மார், துத்பத்ரி ஆகிய இடங்களை சுற்றி பார்த்தோம். இதனையடுத்து, நேற்று (ஏப்ரல் 22) பெகம் மற்றும் பெடல்காமில் மதியம் 12.45 மணியளவில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தோம். அப்போது, எங்களை குதிரை சவாரி அழைத்து சென்ற நபரிடம் சிலர் ஓடி வந்து, பயங்கரவாத தாக்குதல் நடப்பதாக கூறினார்கள். உடனே, 5 துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது. எனக்கு மிகுந்த பயம் ஏற்பட்டது. உடனடியாக, கூட்ட நெரிசலில் அவர் எங்களை பத்திரமாக அழைத்து சென்றார். மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டும் உயிர் பெற்றது போல உணர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ இதோ:
Jayshree from Chennai, a survivor of the Pahalgam attack, recounts harrowing details of the incident. #Pahalgam #PahalgamTerrorAttack pic.twitter.com/uzoHQY1I2O
— Harish M (@chnmharish) April 23, 2025
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

