Jharkhand School Holiday: அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..!
ஆனால், நடப்பு ஆண்டில் வெப்பத்தின் தன்மை தொடருகிறது.
ஜூன் 12 , ஜார்கண்ட் (Jharkhand): இந்தியாவில் கோடை காலம் (Summer Season) மார்ச் மாதத்தின் நடுப்பகுதி முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கும். இதில், மே மாதம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனால் இந்தியாவின் வடமாநிலங்கள் பெருமளவு பாதிப்பை சந்திக்கும்.
நடப்பு ஆண்டில் வெப்பநிலை மே மாதத்தில் கடந்த ஆண்டை விட உச்சமாக இருந்த சூழலில், மே மாதம் நிறைவு பெற்றும் அதே வெயிலின் தாக்கம் தொடர்ந்து நிலவி வருகிறது. தமிழகத்தில் நிலவி வந்த வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிச்சென்று, இன்று 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. Rohit Sharma Retirement: இங்கிலாந்து மண்ணில் தோல்விகண்ட இந்திய அணி.. ஓய்வு குறித்து மனம்திறந்த ரோஹித் ஷர்மா..!
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தமட்டில் வெயிலின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து வருவதால், அங்குள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 14ம் தேதி திறக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.