Bigg Boss Double Eviction (Photo Credit : Instagram)

நவம்பர் 15, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 40 நாட்கள் கடந்துள்ளன. பிக்பாஸ் இல்லத்திலிருந்து இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன் ராஜ், துஷார் ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மன உளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மன உளைச்சலை தருவதாக தானாக முன்வந்து வெளியேறினார். பிக் பாஸை பொறுத்தவரையில் போட்டியாளர்கள் ஸ்ட்ராட்டஜி உபயோகித்து எப்போதும் டாஸ்க் மற்றும் பிக் பாஸ் டைட்டிலை எப்படி ஜெயிப்பது? என்று கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் 9-வது சீசனை பொறுத்தவரையில் சிலர் மட்டுமே போட்டியில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகின்றனர். மற்ற போட்டியாளர்கள் எதற்காக உள்ளே சென்றனரோ அதையே மறந்து ஒன்றும் புரியாதது போல இருக்கின்றனர். அப்படி இருந்ததால் தான் இதுவரை 7 பேர் வெளியேறினர். Siragadikka Aasai: வெளிச்சத்துக்கு வந்த ரோகிணியின் ரகசியம்.. பளார் விட்ட மீனா.. முக்கிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.!

பிக் பாஸ் அரோராவின் (Bigg Boss Aurora) அதிர்ச்சி செயல்:

பிக் பாஸ் 9 சீசன் தமிழ் நிகழ்ச்சியில் எல்லை மீறிய பேச்சுகளும், எல்லை மீறிய செயல்களும் தொடர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் அதனை பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். இந்த வார நிகழ்வுகளை பொறுத்தவரையில் பெஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்களாக எப்ஜே மற்றும் வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். அதே நேரத்தில் திவாகர் மற்றும் கனி வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த கோட்டை கட்டும் டாஸ்க்கில் திவாகரை நோக்கி அரோரா தவறான ஆபாச குறியீட்டை காண்பித்ததாக பார்வதி மற்றும் திவாகர் குற்றம் சாட்டிய நிலையில், அரோரா அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் பார்வதி மற்றும் திவாகர் அரோராவை பற்றி நடிப்பதாகவும், பொறாமைப்படுவதாகவும் சில கருத்துக்களை பேசி இருந்தனர். இந்த கருத்துக்களில் பார்வதி கூறிய சில விஷயங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டு பலரும் அதற்கு எதிராக பதிவிட்டும் வருகின்றனர்.

பிக் பாஸ் 9 டபுள் எவிக்ஷன்?

இந்த வாரத்தை பொறுத்தவரையில் கடுமையான வாக்குவாதங்கள், புறம் பேசுவது, தவறான புரிதல்கள், சவாலான டாஸ்க்குகள் என பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருந்தது. இருப்பினும் பார்வதி மற்றும் திவாகரின் சில தவறான பேச்சுக்கள் குறித்து விஜய் சேதுபதி கேட்க வேண்டும் என இணையதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். கானா வினோத்தை நோக்கி திவாகர் சில வார்த்தைகளை உபயோகித்ததாகவும், அவை தவறானதாகவும் குறிப்பிடப்பட்டு விஜய் சேதுபதி அதனை கண்டித்து திவாகருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த வாரம் பார்வையாளர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக டபுள் எவிக்ஷன் நடந்ததை தொடர்ந்து இந்த வாரமும் டபுள் எவிக்சன் (Double Eviction) நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதலில் காரக்குழம்பு கனி என அறியப்படும் கனி திரு (Kani Thiru) வெளியேறி இருப்பதாகவும், வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரங்களில் சில மோசமான வார்த்தைகளை திவாகர் (Watermelon Star Diwakar) பேசியதால் அவர் வெளியேறுவது உறுதி என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

அரோராவின் மோசமான செயல்: