நவம்பர் 09, சென்னை (Health Tips): மழைக்காலம் தொடங்கினாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி போன்ற உடல்நலக்கோளாறுகள் அதிகம் ஏற்படும். மழை நீர் தேங்கி இருக்கும் குட்டையில் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதால் பருவமழை காலங்களில் கொசுக்கள் கடித்து டெங்கு, மலேரியா போன்ற வைரல் காய்ச்சல்களும் உண்டாகும். இதுபோன்ற உடல்நல கோளாறுகளால் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் செல்வதாக வாழ்க்கை சில மாதங்கள் ஓடும். இதனை சரிசெய்யும் பொருட்டு சுகாதாரத்துறை தற்போது பல விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. மக்களுக்கும் பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. ஒருபக்கம் உடல்நலக்கோளாறு போன்ற பிரச்னை இருந்தாலும் மறுபக்கம் மழையை ரசிக்கும் மக்களும் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதால் வீட்டில் இருக்கும்போது சூடாக, சுவையாக இதமான உணவுகளை அனைவரும் விரும்புவர்.
உடநலக்கோளாறை ஏற்படுத்தும் காய்கறிகள்:
ஆனால் மழைக்காலத்தில் சில காய்களை உண்பதால் உடல்நலக்கோளாறு மேலும் அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?.. மழை காலங்களில் பாக்டீரியா & பூஞ்சைகள் அதிகளவில் வளரும். நாம் மழையில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய காய்கறியில் செய்து சாப்பிடும் உணவுகள் உடல் உபாதையை ஏற்படுத்தலாம். பொதுவாக மழை & குளிர்காலங்களில் நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் எளிதில் வளரும். இவை உடல் நலத்தை கேள்விக்குறியாக்கும். இக்காலங்களில் ஊட்டச்சத்துள்ள பிற வகை உணவுகளை நாம் சாப்பிட்ட தயார் செய்தாலும், அதனை 30 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைப்பது நல்லது. இந்த செய்தித்தொகுப்பில் மழைக்காலத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய காய்கறிகள் குறித்து விரிவாக பார்க்கலாம். Chicken Podimas: நாவூற வைக்கும் சிக்கன் பொடிமாஸ்.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!
காலிப்ளவர் (Cauliflower):
மழைக்காலத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் முக்கிய உணவாக காலிஃபிளவர் பகோடா இருக்கிறது. காலிஃப்ளவர் (Cauli Flower) மற்றும் ப்ரோக்கோலி (Broccoli) போன்றவற்றை வாங்கி சாப்பிடுவோர் மண் சார்ந்த ஒட்டுண்ணிகள் குறித்து அலட்சியமாக இருக்கக் கூடாது. இவை காலிஃப்ளவர், ப்ரோக்கோலியில் இருக்கும் சிறிய துளைகள் போன்ற அமைப்பில் மறைந்து இருக்கும். இவற்றை சமைக்கும் போது 10 நிமிடம் இளம் சூடு உள்ள நீரில் மஞ்சள் சேர்த்து ஊற வைத்து பின் சமைத்து பரிமாறலாம். காலிஃபிளவரில் காணப்படும் குளுகோசினேளேட்கள் உடல் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மழைக்காலங்களில் சுவையாக பக்கோடா செய்யலாம் என்று காலிபிளவரை தேர்வு செய்தால், சென்சிடிவ் திறன் கொண்டவர்களுக்கு அவை சிக்கலை ஏற்படுத்தும். இதனால் மழைக்காலங்களில் காலிபிளவரை தவிர்ப்பது சிறந்தது.
குடை மிளகாய் (Capsicums):
காலிபிளவரை போல குடைமிளகாயிலும் குளுகோசினேளேடுகள் இருக்கின்றன. இதனை மழைக்காலங்களில் சமைக்கும் போது ஐசோதியோசையென்டுகளாக மாறுகிறது. இதனால் குடை மிளகாயை சாப்பிடும் போது குமட்டல், வாந்தி, வயிற்று பிரச்சனை, சுவாச கோளாறு போன்றவையும் நிகழும். மக்களின் கண்ணோட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் இந்த அறிகுறிகள் இருக்கலாம் என எண்ணுவதால் தொடர்ந்து சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பர். அவ்வாறு உண்ணும் பட்சத்தில் நமது உடல்நிலை முன்பு இருந்ததை விட மோசமடையும் வாய்ப்பு உள்ளது.
கத்தரிக்காய் (Brinjal):
கத்தரிக்காயில் காணப்படும் ஆல்கலாய்டு பூச்சிகள், பிற பூச்சிகளுக்கு எதிராக செயல்பட இரசாயனத்தை உற்பத்தி செய்யும். மழைக்காலத்தில் கத்தரியில் இருக்கும் ஆல்கலாய்டு உடலில் ஒவ்வாமை, படை நோய், தோல் அரிப்பு, குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு மழைக்காலம் மட்டுமின்றி வெயில்காலம் உள்ளிட்ட அனைத்து தருவாயிலும் அரிப்பை ஏற்படுத்தும். இது போன்ற காய்கறிகளை உண்ணும்போது கவனமுடன் இருத்தல் அவசியம். நம் உடல்நலனில் நாம் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும் . உடல் உபாதைகளை சரிசெய்ய மருந்து, மாத்திரை மட்டும் தீர்வல்ல. உடலுக்கு நன்மையளிக்கும் காய், பழங்கள் மற்றும் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு இருத்தல் அவசியம்.