Road Accident 4 Killed: அதிவேகமாக வந்து டிவைடரில் மோதிய கார்: உருண்டு விழுந்து 4 பேர் பரிதாப பலி..!
சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் டிவைடர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் நிகழ்விடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் என நால்வர் பலியான சோகம் ம.பி-யில் நடந்துள்ளது.
ஜனவரி 16, சிவபுரி (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரி (Sivapuri) மாவட்டத்தில் உள்ள பந்தர்வாஸ் பகுதியில் கார் ஒன்று விபத்தில் சிக்கியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பந்தர்வாஸ் பகுதியில் அதிவேகத்தில் வந்த கார் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் டிவைடர் மீது மோதி உருண்டு விபத்தில் சிக்கியது.
நால்வர் பலி: இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஞ்சிய 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். Bank Accounts Blocked: ஆன்லைன் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 8,674 வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிரடி சம்பவம் இதோ.!
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிவபுரி காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

