ஜனவரி 16, ஜார்கண்ட் (Technology News): தேசிய அளவில் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டதில் இருந்து பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் மக்களுக்கு தேவையான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், சில நேரங்களில் அறியாமை, வற்புறுத்தல், மிரட்டல் போன்றவற்றால் அவை தொடர்கின்றன. இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக ஜார்கண்டும் இடம்பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களை மையமாக வைத்து சர்வதேச அளவிலும், தேசிய அளவில் சைபர் குற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
8 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிக்கணக்குகள் முடக்கம்: அந்த வகையில், தற்போது மத்திய அரசு ஜார்கண்டில் செயல்பட்டு வந்த சைபர் கிரைம் தொடர்பான வழக்குகளில் சிக்கிய 8674 வங்கி கணக்குகளை முடக்கி இருக்கின்றன. அம்மாநிலத்தில் உள்ள தியோகர் மாவட்டத்தில் 2002 கணக்குகளும், தன் பாத் மாவட்டத்தில் 1183 கணக்குகளும், ராஞ்சியில் 959 கணக்குகளும் முடக்கப்பட்டு இருக்கின்றன. டார்க் வெப் உட்பட பல்வேறு மோசடி வலைத்தளங்கள் மூலமாக இந்த கணக்குகள் பணம் பெற்று இருக்கின்றன. இந்த விஷயம் தொடர்பாக 495 பேரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களிடமிருந்து 1164 செல்போன்கள், 1725 சிம்கார்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மோசடி செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் வாடகை வீட்டில் வசித்து வந்து போலியான சிம்கார்டுகள், பார் கோடுகள் ஆகியவற்றைன் உதவியுடன் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளது. Kiara LipLock With Sidharth: கணவரின் பிறந்தநாளுக்கு லிப்லாக் கொடுத்து உற்சாகப்படுத்திய நடிகை: கொண்டாட்டத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ்.!
கவனமாக இருக்க வேண்டும் மக்களே: மோசடி செயல்களில் பணம்பெறும் கும்பல் மக்களை சலுகை விலையில் பொருட்கள் வழங்குதல், லோன் வழங்குதல், உடனடி பண இரட்டிப்பு, ட்ரேடிங் செயலிகள், ஆபாசமாக பேச பெண்கள் இருக்கிறார்கள் என பலவகைகளில் வலைவிரித்து குற்றச்செயலை அரங்கேற்றி இருக்கிறது. இவ்வாறான கும்பலின் பண வேட்கையில் சிக்கி வாழ்க்கையை இழந்தோரும், உயிரை மாய்த்தோரும் ஏராளம். இவ்வாறான கும்பலால் பாதிக்கப்படும் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், 24 மணிநேரம் முதல் 48 மணிநேரத்திற்குள் பணத்தை மீட்க வாய்ப்புகள் உள்ளன.