Money Stolen From Parked Car: பட்டப்பகலில் துணிகரம்.. காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 இலட்சம் திருட்டு.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
கார் வைத்துள்ளவர்கள், தங்களின் செலவுக்கோ அல்லது பிற விசயத்திற்கோ காருக்குள் பணத்தை வைத்து வெளியே சென்றால், அதனை தெரியும்படி வைத்து செல்வது சமூக விரோதிகளால் நோட்டமிடப்பட்டால் பணம் கொள்ளைபோகும் சூழல் உருவாகும்.
அக்டோபர் 23, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஷர்ஜாபூர் (Sharjapur, Bengaluru) பகுதியில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தின் வெளியே BMW கார் நின்று கொண்டு இருந்தது. அச்சமயம், காருக்குள் பணம் வெளியே தெரிந்தபடி வைக்கப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது.
இதனை நோட்டமிட்ட 2 பேர் பணத்தை களவாட திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு மக்கள் யாரேனும் கவனிக்கின்றனா? என்ற தொடர்ந்து நோட்டமிட்டு இருந்துள்ளனர். Sleepiness Less than 6 Hours: 6 மணிநேரத்திற்கு குறைவாக தூங்கினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?.. மக்களே உஷார்.!
மற்றொருவர் இருசக்கர வாகனத்தை தயாராக நிறுத்த, காரின் கண்ணாடியை உடைத்த நபர் விரைந்து காருக்குள் பாய்ந்து பணப்பையை எடுத்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.
நகரின் பரபரப்பான பகுதியில் நடத்த பணம் திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அதன் வீடியோ வெளியாகி வருகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Rs 13 lakhs stolen from a parked car in Bengaluru on 20th October; case registered, say police.
(Video source: Bengaluru Police) pic.twitter.com/u8V4K5tGzI
— ANI (@ANI) October 23, 2023
(The above story first appeared on LatestLY on Oct 23, 2023 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

