அக்டோபர் 23, சென்னை (Health Tips): எப்போதும் செல்போனை கையில் வைத்துக் கொண்டு வேலை பார்க்கும் டிஜிட்டல் யுகத்தில் பணியாற்றி வரும் பலரும், தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
செல்போன் மோகம், கணினியில் வேலை என தூங்கும் நேரம் தாமதிக்கப்படுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது இரவில் திடீரென கண் விழிப்பது, காலையில் எழுந்ததும் செல்போனை கைகளில் தேடுவது என ஒவ்வொருக்கு ஒருவர் மாறுபடுகிறது.
இரவு நேரத்தில் போதுமான அளவு தூங்காத பட்சத்தில், மறுநாள் சோர்வு மட்டுமே எஞ்சியிருக்கும். தூக்கமின்மை நமது உடல் நலனின் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நமது உடலுக்கு தேவையான நேரம் தூங்காத பட்சத்தில் உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், பக்கவாதம், இதய நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். OnlyFans Annie Knight: ஒரு ஆண்டுக்குள் 300 பேருடன் உடலுறவு - மனம்திறந்த ஒன்லிபேன்ஸ் நடிகை.!
நாளொன்றுக்கு குறைந்தது இரவில் ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாக உறங்கும் நபர்களுக்கு மாரடைப்பு, மனச்சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகம் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தூக்கமின்மை, இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும் என்பதால் இதயச் செயலிழப்பு, சிறுநீரக நோய் போன்றவை வழிவகுக்கும். இரவு நேரத்தில் கட்டாயம் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.
நாம் உறக்கத்தில் இருக்கும்போது உடல் தன்னைத்தானே எப்போதும் சரி செய்து கொள்ளும். இதனால் உடலில் இருக்கும் சிறிய அளவிலான பிரச்சனைகள் சரியாகும். இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்தம் சர்க்கரை அளவு சீராகும். போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதி அடையும் பட்சத்தில், மன அழுத்த காரணம் நமது உடல் நலமும் பாதிக்கும்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, இதயம் & இரத்தநாளங்கள் ஓய்வு எடுப்பதால் மன அழுத்தம் குறையும். உடல் புத்துணர்ச்சி அடையும்.