விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஐயப்பன் (வயது 25)

மார்ச் 03, பெண்ணாடம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் (Virdhachalam, Cuddalore), திட்டக்குடி (Tittakudi) தாலுகா, பெண்ணாடம் (Pennadam) இருளர் தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன் (வயது 25). இவரின் மனைவி தாட்சாயிணி. கர்ப்பிணியாக இருந்த தாட்சாயிணிக்கு கடந்த மாதம் விருத்தாச்சலம் அரசு (Virudhachalam Govt Hospital) மருத்துவமனையில் ஆண் குழந்தை (Male boy Delivery) பிறந்துள்ளது. குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை தந்தை வாங்கவில்லை.

இந்த நிலையில், மகனுக்கு பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) வாங்க ஐயப்பன், தனது நண்பர் மருதுபாண்டியன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை நோக்கி பயணித்துள்ளார். அங்கு பிறப்பு சான்றிதழை வாங்கிவிட்டு, இருவரும் பெண்ணாடம் நோக்கி பயணம் செய்துள்ளனர். Ration Shop keepers Arrested: ஒரேவாரத்தில் நியாயவிலை கடை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 118 பணியாளர்கள் அதிரடி கைது..!

இவர்கள் பெண்ணாடத்தை அடுத்த துறையூர் (Thuraiyur, Pennadam) பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டு இருந்த நேரத்தில், திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி பயணித்த அரசு பேருந்து, இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து ஐயப்பன் மற்றும் மருதுபாண்டி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

தூக்கி வீசப்பட்ட இருவரும் சாலையிலேயே பலத்த காயமடைந்து துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பெண்ணாடம் காவல் (Pennadam Police) துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி (Tittakudi Govt Hospital) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் தொழுதூரில் இருந்து விருத்தாச்சலம் வரையில் உள்ள இணைப்பு சாலையில் பல்வேறு கோர விபத்துகள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது. மணல் லாரிகள், கனரக லாரிகள், பேருந்துகள் என மக்கள் அனுதினமும் வாகனத்தை கண்டாலே பதறியபடி தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.