ஆகஸ்ட் 09, மைசூரு (Karnataka news): கர்நாடக மாநிலம் மைசூரு (Mysuru) தாலுக்காவிலுள்ள சிந்துவெளி கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 07) இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மைசூரு நகரத்திலிருந்து 16 கி.மி. தொலைவிலிருக்கும் அரசமரம் (peepal) ஒன்றிலிருந்த இரண்டு பறவைக் கூடுகளை ரவி என்ற கொத்தனார் கலைத்துள்ளார். இதனால் பறக்க தயார் நிலையிலிருந்த 24 பிஞ்சு பறவைகள் உயிரிழந்துவிட்டன. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனத்துறை அதிகாரிகள் ரவியை நேற்று (ஆகஸ்ட் 08) கைது செய்து காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
Times of India மேற்கொண்ட ஆய்வில் ரவி வழக்கமாக இளைப்பாறும் இடத்தில் மிகுதியான பறவைக் கழிவுகள் காணப்பட்டதே (Man’s frustrated act lead to the destruction of fledgling birds.) இந்த கொடுஞ்செயலுக்கு தூண்டுதலாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர் குச்சிகளைக் கொண்டு நீர்காகம் மற்றும் கொக்குவகையின் கூடுகளைக் கலைத்ததால் பறப்பதற்கு தயார் நிலையில் இருந்த 24 இளம் பறவைகள் அழிந்துவிட்டது. Rajinikanth Went to Himalayas: 4 ஆண்டுகள் கழித்து இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்; ஜெயிலர் 'Impossibile' - ரசிகர்களுக்கு இன்பச்செய்தியுடன் பேட்டி.!
நீர்காகங்கள் அவ்வளவு எளிதில் மைசூரு பகுதியில் இனப்பெருக்கத்தை மேற்கொள்வதில்லை. இருப்பினும் போதுமான அளவிற்கு நீர்பரப்பும் மீன்களும் இருந்ததாலே அவற்றை சாதகமாக்கிக்கொண்டு அங்கே கூடுகள் அமைத்து முட்டைகளை பாதுகாத்து வைத்துள்ளது. இடம் பெயர்வதற்கு முன் ஒரு இரண்டு மாத காலம் இந்த பறவைகள் இங்கு தங்குவதாக கூறப்படுகிறது.
இந்த மோசமான சம்பவம் பறவைகளின் எண்ணிக்கையில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கூடுகள் மற்றும் பிஞ்சுப் பறவைகளின் அழிவால் எதிர்காலத்தில் மைசூருப் பகுதியில் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான சாத்தியங்கள் குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.