Indian Actor Rajinikanth | Himalayas (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 09, போயஸ் கார்டன், சென்னை (Poes Garden, Chennai): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்பது நாடறிந்த விஷயம். இவர் அவ்வப்போது இமயமலைக்கு சென்று மக்களோடு மக்களாக எளிய பயணத்தை மேற்கொண்டு வருவார். அங்கு தியானமும் செய்வார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் நாளை (10 ஆகஸ்ட் 2023) அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. Salem Couple Suicide: 3 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் – தந்தை தற்கொலை; உயிர்பிழைக்க வாய்ப்பு கிடைத்தும் தந்தையின் பகீர் செயல்.!

படத்தின் வெளியீடை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் அதனை திருவிழாவாக கொண்டாட பல இடங்களில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். ரஜினிகாந்துக்கு மலேஷியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். ஜப்பானை சேர்ந்த ரசிகர்களில் சிலர் ஜெயிலர் திரைப்படத்தை காண தமிழகமும் வந்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணிக்கிறார். இதனை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

"நான் இமயமலை நோக்கி பயணிக்கிறேன். கொரோனா காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் தற்போது செல்கிறேன். ஜெயிலர் திரைப்படம் மிகவும் அட்டகாசமாக வந்துள்ளது. நான் எப்படி நடித்துள்ளேன் என்பதை படம் பார்த்துவிட்டு நீங்கள்தான் கூறவேண்டும்" என பேசினார்.