Kottayam Women Suicide: இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன்; தொடரும் மர்ம தற்கொலைகள்.. அதிர்ச்சியில் கேரள மக்கள்.!

தன்னை விட்டு விலகி சென்ற முன்னாள் காதலியை பழிவாங்க எண்ணிய இளைஞரால் இளம்பெண் தற்கொலை செய்துகொள்ள, அவரின் மறைவை அறிந்த இளைஞரும் தற்கொலை செய்துகொண்டார்.

Kottayam Women Suicide: இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன்; தொடரும் மர்ம தற்கொலைகள்.. அதிர்ச்சியில் கேரள மக்கள்.!
Kottayam Women Suicide Case (Photo Credit: ANI / Mathrubumi English)

மே 04, காசர்கோடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் (Kasaragod, Kerala), கன்ஹங்காட் பகுதியை சேர்ந்தவர் அருண் வித்யாராமன் (Arun Vidhyadharan) (வயது 32). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள விடுதியில் அறையெடுத்து தங்கிய நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை மேற்கொள்கையில், அருண் வித்யாதரன் அவரின் முன்னாள் காதலியை மிரட்டி வந்தது தெரியவந்தது.

அவரின் முன்னாள் காதலி குறித்து விசாரணை செய்கையில், அவர் கோட்டயம் நகரை சேர்ந்த ஆதிரா (Athira) (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பே வீட்டில் வைத்து தற்கொலை செய்து இறந்துவிட்டார். காவல் துறையினர் ஆதிரா குறித்து விசாரணை செய்ய செல்கையில் அவரின் மரணம் தெரியவந்துள்ளது. Jailer Update: ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்.. அசத்தல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்.!

முதற்கட்ட விசாரணையில் அருணுடன் ஆதிரா பழகி வந்த நிலையில், ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துள்ளனர். இந்த பிரிவை அருண் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அருண் ஆந்திராவை தனிமையில் எடுத்த புகைப்படங்களை காண்பித்து மிரட்டி வந்ததாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதால், அவர்களின் செல்போன் தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அறிக்கைக்கு பின்னரே மேற்படி விசாரணை நடைபெறும் என காசர்கோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on May 04, 2023 07:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).