Young Woman Runs Away With Her Lover: இளம்பெண் கள்ளக்காதலனுடன் தப்பி ஓட்டம்; கணவர் தனது குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்..!

உத்தர பிரதேசத்தில் தனது கணவர், நான்கு குழந்தைகளை பரிதவிக்க விட்டுவிட்டு, இளம்பெண் கள்ளக்காதலனுடன் தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Young Woman Runs Away With Her Lover: இளம்பெண் கள்ளக்காதலனுடன் தப்பி ஓட்டம்; கணவர் தனது குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்..!
Father With His Children (Photo Credit: @bstvlive X)

ஆகஸ்ட் 01, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் கொத்தனார் ஒருவர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில், பவன்பூர் பகுதியை சேர்ந்த பிளம்பர் ஒருவர் அடிக்கடி வேலைக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், பிளம்பர் (Plumber) மற்றும் கொத்தனார் (Mason) மனைவி இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி, அந்த பெண் தனது பிள்ளைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிவிட்டார். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, வீட்டில் இருந்த ரூ. 45 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை எடுத்து சென்றுள்ளார். Aman Ramgarhia MMS Leaked: நண்பரை நம்பி ஏமாற்றமடைந்த இன்ஸ்டா பிரபலம்; அமன் ராம்கர்ஹியாவின் அந்தரங்க வீடியோ வைரல்..!

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தனது நான்கு குழந்தைகளுடன் எஸ்எஸ்பி அலுவலகத்திற்கு வந்து முறையிட்டுள்ளார். தனது மனைவியைக் கண்டுபிடித்து கொடுக்குமாறு, காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அவரை காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 18, 3312 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).