Madhya Pradesh Shocker: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 4 பேர் கைது.!

பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே அது சார்ந்த குற்றங்கள் குறையும்.

Madhya Pradesh Shocker: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 4 பேர் கைது.!
RAPE FILE PIC (PHOTO CREDIT: PIXABAY)

ஜூலை 16, டாடியா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள டாடியா மாவட்டம் (Datia), உன்னாவ்வ் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது மற்றொரு சகோதரியுடன் சென்றபோது கும்பலால் கடத்தப்பட்டார்.

இவர்களை கடத்திய கும்பல் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மற்றொரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளது. இவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமிகள், தங்களின் பெற்றோரிடம் நடந்ததை கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். Mystery Death: காவல்துறை விசாரணைக்கு சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம மரணம்; மதுப்பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபம்.! இளம் மனைவி கண்ணீர்.! 

இதனைக்கேட்டு பதறிப்போன பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இதில், பாதிக்கப்பட்ட சிறுமியை ஒருவர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இதனால் சிறுமிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டு இருக்கிறது.

விசாரணை நடத்திய காவல் துறையினர் தற்போது வரை 4 பேரை கைது செய்த நிலையில், இவர்களில் 3 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் ஆவார்கள். நால்வரில் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ-வின் மகன் எனவும் காங்கிரஸ் கட்சி குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 16, 2023 08:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).