Died Victim Sridhar | Death File Pic (Photo Credit: Twitter / Pixabay)

ஜூலை 15, பம்மல் (Chennai News): சென்னையில் உள்ள பம்மல், எம்.ஜி.ஆர் நகர், நல்லதம்பி தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (வயது 25). இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்க்கிறார். ஸ்ரீதரின் மனைவி மஞ்சு. தம்பதியின் வீட்டருகே விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டினை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வந்தபோது கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை திருடி சென்றது தெரியவந்தது.

இந்த விஷயம் குறித்து விஜயலட்சுமி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள்ளனர். முதற்கட்டமாக ஸ்ரீதரின் மீது உள்ள குற்ற வழக்குகளை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் ஸ்ரீதர் தனது மனைவி மஞ்சுவுடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு aajaragi இருக்கிறார்.

விசாரணையில் தான் நகைகள் எதையும் திருடவில்லை என ஸ்ரீதர் மறுப்பு தெரிவித்துள்ளார். விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்ற நிபந்தனையோடு காவல் ஆய்வாளரால் ஸ்ரீதர் அனுப்பி வைக்கப்பட, வீட்டிற்கு சென்ற ஸ்ரீதர் தனக்கு நெஞ்சு வலிக்கிறது என மனைவியிடம் கூறியுள்ளார். பதறிப்போன அவர் கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கணவரை சிகிச்சைக்கு அனுமதி செய்தார். IND Vs WI: 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது இந்தியா; சுருண்டு விழுந்த மேற்கிந்திய தீவுகள் அணி.! 

அங்கு ஸ்ரீதரை பரிசோதனை செய்த மருத்துவர், வாயு காரணமாக நெஞ்சு வலித்துள்ளது என கூறி ஊசி செலுத்தியுள்ளார். பின் வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஸ்ரீதர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். மீண்டும் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Crime File Picture (Photo Credit: Pixabay)

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தியும் வருகின்றனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், "ஸ்ரீதரின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இராயப்பேட்டை காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியும் ஆவார். மேற்கூறிய வழக்கில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஸ்ரீதர் உலாவியது கேமிராவில் பதிவாகியுள்ளது. PM Modi & French President Emmanuel Selfie: “பிரான்ஸ் – இந்திய நட்புறவு வாழ்க!” – பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மகிழ்ச்சி.! 

அதனால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்த நிலையில், உடனடியாக அவர் விசாரணைக்கு வரவில்லை. ஒருநாள் கழித்து விசாரணைக்கு ஆஜரானவரிடம் 15 நிமிடம் விசாரணை நடந்தது. பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையின் போது ஸ்ரீதரின் மனைவியும் உடன் இருந்தார். காவல் துறையினர் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதர் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி சரிவர சாப்பிடவில்லை.

அதன்பின்னரே நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஸ்ரீதர் போதையில் இருந்ததால் மருத்துவர் சோதனைக்கு பின் வாயு பிரச்சனையை கண்டறிந்துள்ளார். இருப்பினும் அவர் இறுதியில் உயிரிழந்து இருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் ஏற்பாடு விசாரணை நடைபெறும்" என்று கூறியுள்ளனர். ஸ்ரீதரின் மனைவி மஞ்சு கணவரின் மரணம் குறித்து கூறுகையில், "காவல் ஆய்வாளர் கணவரை கடுமையாக எச்சரித்தார். இதனால் பயத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.