Couple Astitva Soni - Aastha (Photo Credit: @IndiaToday X)

டிசம்பர் 11, இந்தூர் (Indore): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சேர்ந்த பெண்மணி அல்கா சோனி. இவர் பிறப்பில் பெண்ணாக இருந்தாலும், தன்னை ஆணாக உணர்ந்துள்ளார். முதலில் அவருக்கு எந்த வித்தியாசமும் தெரியாத நிலையில், பின்னாளில் அதனை உணர்ந்து இருக்கிறார்.

47 வயதில் திருமணம்: இவர் தான் ஆணாக மாற வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான சிகிச்சைகளை பெற்று உடலளவிலும் ஆணாக மாறி இருக்கிறார். தனது பெயரையும் அசித்வா சோனி என மாற்றம் செய்துள்ளார். கடந்த டிசம்பர் 09ம் தேதி அவருக்கு 47வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. Goods Train Derailed: சென்னை நோக்கி வந்த சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து: தென்மாவட்ட இரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி..! 

திருநம்பியாக மாறினார்: இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்து திருநம்பியாக வாழ்ந்து வந்தவர், தனது காதலி ஆஸ்தாவை கரம்பிடிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் மாவட்ட துணை ஆட்சியரிடம் மனுவையும் வழங்கினார். ஆட்சியரும் மனுவை பரிசீலனை செய்து சமீபத்தில் ஏற்றுக்கொண்டார்.

சிறப்பு திருமண சட்டத்தில் அங்கீகாரம்: இந்த தகவல் தம்பதிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், இருதரப்பு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து அதற்கான சான்றிதழையும் பெற்றனர். தற்போது தம்பதிகள் இருவரும் சிறப்பு திருமண சட்டத்தின் வாயிலாக சான்றிதழையும் பெற்று, இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

காதல் திருமணத்தில் முடித்தது: திருமணத்திற்கு முன்னதாக ஜோடிகள் இருவரும் நன்கு பேசி, பழகி காதலித்து இருக்கின்றனர். இருவரும் இருதரப்பு குடும்பத்தாரிடமும் பேசி பழகி நன்மதிப்பையும் பெற்றுள்ளனர். அதனைதொடர்ந்தே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.