Goods Train Derailed: சென்னை நோக்கி வந்த சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து: தென்மாவட்ட இரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி..!
சமீபகாலமாக சென்னையில் பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலைகளின் தரம் என்பது வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஆய்வுகள் அவசியம். அதேபோல, இரயில் வழித்தடமும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.
டிசம்பர் 11, செங்கல்பட்டு (Chengalpattu News): தூத்துக்குடியில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி, இரும்பு பாரம் ஏற்றிய சரக்கு இரயிலானது நேற்று இரவு 10:30 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூரை கடந்து வந்துகொண்டு இருந்தது.
தடம்புரண்ட சரக்கு இரயில்: இந்நிலையில், திடீரென இரயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதனைத்தொடர்ந்து, விபத்து தொடர்பாக தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. Rajasthan Car Crash: கார் - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாப பலி: தேசிய நெடுஞ்சாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்.!
மீட்பு பணிகள் தீவிரம்: தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இரயில் நிலையங்களில் இருந்து இரயில்வே பணியாளர்கள் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு, இரயிலை மீட்கும் பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரயில் சேவை பாதிப்பு: இதனால் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்படும் இரயில் சேவையும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரவிருந்த இரயில் சேவையும், செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார இரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Tamil Nadu: Goods train coming towards Chennai Harbour carrying iron-related rods derailed near Chengalpattu last night around 10.30 pm. More than 5 coaches of the train derailed. The movement of passenger trains from South Tamil Nadu towards Chennai has been affected.… pic.twitter.com/oyY8t7Gp0P
— ANI (@ANI) December 11, 2023
(The above story first appeared on LatestLY on Dec 11, 2023 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

