Madhya Pradesh Ram Temple: கிணற்று படிக்கட்டில் கூட்டமாக நின்று பூஜை.. பாரம் தாங்காமல் நடந்த விபத்தில் 18 பேர் பலி.!

ராம நவமியை முன்னிட்டு படிக்கட்டு கிணற்றில் கூட்டமாக நின்று பூஜைகள் செய்த நிலையில், பாரம் தாங்காமல் கிணறு படிக்கட்டுகள் கிணற்றுக்குள் விழுந்து 18 பேர் பலியாகினர்.

Madhya Pradesh Ram Temple: கிணற்று படிக்கட்டில் கூட்டமாக நின்று பூஜை.. பாரம் தாங்காமல் நடந்த விபத்தில் 18 பேர் பலி.!
Madhya Pradesh Ram Temple Accident Visuals (Photo Credit: Twitter)

மார்ச் 31, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருக்கும் ராமர் கோவிலில் படிக்கட்டு கிணறு உள்ளது. நேற்று ராம நவமி கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, கிணற்றில் படிக்கட்டில் இருந்து பக்தர்கள் பூஜைகள் செய்துள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக கிணறு படிக்கட்டு இடிந்து கிணற்றுக்குள் விழுந்துவிடவே, அதில் நின்ற பக்தர்கள் அனைவரும் நீருக்குள் விழுந்து உயிருக்கு அலறி துடித்தனர். Ram Temple Fire: ராம நவமி கொண்டாட்டத்தின் போது பயங்கரம்; தீப்பிடித்து எரிந்த ராமர் கோவில்.!

பின்னர், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

அங்கு கிணற்றுக்குள் விழுந்த 20 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 18 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 31, 2023 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).