Ram Temple Fire Break out in Godavari (Photo Credit: ANI)

மார்ச் 30, கோதாவரி (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டம் (Godavari, Andhra Pradesh), துவா கிராமத்தில் ஸ்ரீ ராமர் கோவில் (Sri Ram Temple) அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ராம நவமி (Ram Navami Celebration) திருவிழா கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. இதற்காக விழாக்குழு சார்பாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவிலை சுற்றிலும் தென்னை மரத்தின் சருகு கொண்டு மக்களுக்கு பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பந்தல் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. பக்தர்கள் கோவிலுக்குள் விழாக்கோலம் பூண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. Agra Train Suicide: இரயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை; பதறவைக்கும் வீடியோ வைரல்.. நொடியில் நடந்த சோகம்.!

இதனால் பதறிப்போன மக்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்தபடி கோவிலின் வாயில் வழியே வெளியே ஓட்டம் பிடித்தனர். தற்போது வரை யாருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? அல்லது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா? என்ற விபரங்கள் தெரிவிக்கவில்லை. தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.