Kamadhipura Fire Accident: தனியார் ரெஸ்டாரண்டில் பயங்கர தீ விபத்து; கழிவறையில் சிக்கியவர் மூச்சுத்திணறி பலி?..!

காமத்திபுரா பகுதியில் செயல்பட்டு வரும் ரெஸ்டாரன்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியான சோகம் நடந்துள்ளது.

Kamadhipura Fire Accident: தனியார் ரெஸ்டாரண்டில் பயங்கர தீ விபத்து; கழிவறையில் சிக்கியவர் மூச்சுத்திணறி பலி?..!
Mumbai Restaurant Fire Accidetn (Photo Credit: @ANI X)

ஜனவரி 26, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, காமத்திபுரா, கிராண்ட் ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று நள்ளிரவு 2 மணி அளவில் ரெஸ்டாரண்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ரெஸ்டாரண்டில் இருந்த பலரும் அவசர கதியில் அங்கிருந்து வெளியேறினர். சிலர் உள்ளே சிக்கிக் கொண்டதாக தெரிய வருகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், விரைந்து செயல்பட்டு தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். Akshay Wish on Republic Day: 'ஜெய்ஹிந்த், ஜெய் பாரத்' - நடிகர் அக்சய் குமாரின் குடியரசு தின வாழ்த்து.! 

கழிவறையில் சிக்கிய ஒருவர் பலி: ரெஸ்டாரண்டுக்குள் யாரேனும் சிக்கி இருக்கின்றனரா? என சோதித்தபோது கழிவறைக்குள் ஒருவர் மயங்கி நிலையில் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவரின் மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தாரா? என்பது குறித்த தகவலை உறுதி செய்ய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் விபரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. 16க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

(The above story first appeared on LatestLY on Jan 26, 2024 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).