![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/01/Akshay-Kumar-Republic-Day-2024-Photo-Credit-Instagram-380x214.jpg)
ஜனவரி 26, மும்பை (Mumbai): ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து, சர்வதேச அளவில் அறியப்படும் இந்திய திரைப்பட நடிகர் அக்சய் குமார் (Akshay Kumar). எப்போதும் இந்தியாவின் மீது பற்றுகொண்டவராக இருக்கும் அக்சய், அதனை தனது படங்களின் வாயிலாகவும் மக்களுக்கு எடுத்துரைப்பார். இந்தியாவில் ஜனவரி 26, 2024 தேதியான இன்று 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் அக்சயின் (Republic Day 2024) குடியரசுதின வாழ்த்து: இந்நிலையில், நடிகர் அக்ஷய் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து, வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "புதிய இந்தியா, புதிய நம்பிக்கை, புதிய பார்வை. நமக்கான நேரம் வந்துவிட்டது. குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த், ஜெய் பாரத்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. Google Doodle for Republic Day 2024: இந்தியர்கள் கொண்டாடும் குடியரசுதினம்; கூகுள் வெளியிட்ட அசத்தல் டூடுள்.. விபரம் உள்ளே.!
அடுத்தடுத்து 8 படங்களில் நடிக்கும் அக்சய்: நடிகர் அக்சய் குமாரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய ஓஎம்ஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டில் அவரின் நடிப்பில் சூரரைப்போற்று, வேதாத் மராத்தே வீர் டவுட்லே சாத் (Vedat Marathe Veer Daudle Saat), படே மியான் சோட்டே மியான் (Bade Miyan Chote Miyan), ஸ்கை போர்ஸ் (Sky Force), சிங்கம் அகைன் (Singham Again) உட்பட 8 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
View this post on Instagram